ஜன 21ல் சுந்தர்.சி, விஷால் படத்தின் முதல் பார்வை வெளியீடு | இளையராஜாவுக்கு பத்மபாணி விருது | சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! |

சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வரும் ரஜினி, கடந்த மாதம் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா சென்றார். அங்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டதோடு ஓய்வு நேரத்தில் அங்குள்ள நண்பர்கள் இல்லங்களுக்கும் சென்று வந்தார். அதோடு ரசிகர்கள் சிலரும் அவரை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இன்று சென்னை திரும்பினார் ரஜினி. அமெரிக்காவிலிருந்து கத்தார் வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் அதிகாலை சென்னை வந்திறங்கினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்கும் ரஜினி, அடுத்தப்படியாக அண்ணாத்த படத்தின் டப்பிங்கில் இறங்குகிறார். இதை முடித்ததும் அவரின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம். இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம்.




