'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி, சிவா இயக்கத்தில் தான் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பும் டப்பிங் பணியும் இருக்கின்றன. வரும் 12ந்தேதி சென்னையில் இதற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. கோல்கட்டாவிலும் சில காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. எனவே ரஜினி கோல்கட்டா செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ந்தேதி வெளியாக உள்ளது.
தற்போது ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினியின் 169வது படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து 170வது படமாக மருமகன் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.