நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மும்பை : இசையமைப்பாளர் இளையராஜா 'பத்மபாணி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மஹாராஷ்டிராவில் வரும் 28ம் தேதி நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும் , மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, ‛அஜந்தா - எல்லோரா' சர்வதேச திரைப்பட விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது . இதில், கலைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது . இந்த ஆண்டுக்கான அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா வரும் 28ல் துவங்கி பிப., 4வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடக்கவுள்ளது. இந்த விழாவின் துவக்க நாளான ஜன., 28ல் ராஜ்யசபா எம்.பி.,யும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர்
விருது பெறுவோருக்கு நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். முன்னதாக பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குநர் - எழுத்தாளர் சாய் பிரனாஜ்பே மற்றும் நடிகர் ஓம் புரி உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.