அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கனா, க.பெ.ரணசிங்கம், காக்கா முட்டை படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர். அவர் தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பட்ட கஷ்டங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 8 வயது இருக்கும்போது அப்பா இறந்து விட்டார். அம்மா சேலை வியாபாரம் செய்து, எல்.ஐ.சி ஏஜெண்ட் வேலை செய்து எங்களை காப்பாற்றினார். குடும்பத்தை காப்பாற்றுவான் என்று நினைத்த மூத்த அண்ணன் எனது 10வது வயதில் இறந்தான். கடைசி நம்பிக்கையாக இருந்த 2வது அண்ணன் சாலை விபத்தில் இறந்தான்.
15 வயதில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு. குடும்பத்த காப்பாற்ற சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். 250 ரூபாய் சம்பளம். நண்பர்கள் வீட்டு விழாக்களை தொகுத்து வழங்கினேன். ஒரு விழாவுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள். அப்படியே தொலைக்காட்சிக்கு சென்றேன். சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தேன். 1500 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அதே சீரியலில் நடித்தவர்களுக்கு பெரிய நடிகைகளுக்கு பல ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். அதனால் நானும் பெரிய நடிகை ஆக வேண்டும் என்று சினிமா வாய்ப்பு தேடினேன்.
அவர்களும் இவர்களும் தான் நான் நடித்த முதல் படம். ஆனால் அட்டகத்தி படத்தில் நடித்த அமுதா கேரக்டர் தான் என்னை அடையாளம் காட்டியது. அதன் பிறகு மளமளவென வளர்ந்தது அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில் "நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை" என்று புறக்கணித்தார்கள், நிறத்தை கிண்டல், கேலி செய்தார்கள். என்றைக்காவது ஹீரோயினாகி காட்டுவேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அனைத்தையும் சகித்துக் கொண்டேன். பாலியல் ரீதியிலான அணுகுமுறைகளை தைரியத்துடன் எதிர்த்து நின்றேன். என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.