சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிபிலிம் மற்றும் திரைப்படங்கள் வரை பல படைப்புகளை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது ஓடிடி தளத்தில் இரை எனும் இணைய தொடர் மூலம் வெப் சீரிசில் களம் இறங்கி உள்ளது.
இதில் சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார். தூங்காவனம், கடாரம் கொண்டான் படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். க்ரைம் திரில்லராக இந்த இணைய தொடர் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு துவக்கம் நேற்று நடந்தது.
இதுகுறித்து ராதிகா சரத்குமார் கூறியதாவது: ஓடிடி தளத்தில் எங்களது அறிமுக தயாரிப்பான இரை இணைய தொடர், எப்போதும் போல் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் படியான அனைத்து அம்சங்களும் பொருந்திய கதையாகும். இந்த இணைய தொடர் க்ரைம் திரில்லர் வகையில் உருவானாலும், உறவுகள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும். சரத்குமார் டிஜிட்டல் தளத்தில் எங்கள் நிறுவனம் மூலம் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி.
நான் எப்போதும் திரைத்துறையை எனது மற்றொரு குடும்பமாகவே தான் கருதி வந்திருக்கிறேன். இந்த கொரோனா கொடிய காலத்தை கடந்து, தற்போது தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் ஒன்றினைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வது மிகப்பெரும் உற்சாகத்தையும் மனதிற்கு பெரும் சந்தோசத்தையும் அளிக்கிறது. என்றார்.