'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று ஜுலை 1ம் தேதி முதல் சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. இன்று நடனக் காட்சியுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாம். இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் வரையில் சென்னையில்தான் நடக்கும் என்கிறார்கள்.
இதற்காக சென்னையில் உள்ள தனியார் அரங்கில் மிகப் பிரம்மாண்டமான செட் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த செட் அமைக்கும் பணி ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை பரவ ஆரம்பித்த பின் அந்தப் பணிகளையும் விஜய் நிறுத்தச் சொன்னதாகத் தகவல் வெளியானது.
கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் மீண்டும் அந்தப் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த 20 நாட்களில் பாடல் காட்சிகள், விஜய், பூஜா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளைப் படமாக்க உள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்து ஜார்ஜியாவிலும் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.
2022 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.