மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா |
சென்னை : 'ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும்' என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக்குழு கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. இதில் சில மு்க்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை: தியேட்டர்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்கும் முறை கணினிமயமாக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தியேட்டரில் திரையிடப்படும் படங்களில் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வரும் வருமானம் தியேட்டர் உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து தர வேண்டும். அதேபோல் விளம்பரத்திலும் பங்கு வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க, தியேட்டர் பெயரிலேயே இனி வரி கட்ட வேண்டும். மேலும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்க, சிண்டிகேட் அமைத்து செயல்படும் முறையை தியேட்டர் உரிமையாளர்கள் கலைக்க வேண்டும்.
சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது, மூன்று வகையான டிக்கெட்களை விற்க வேண்டும். படங்களை வெளியிடும் போது, வி.பி.எப்., கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்துவதில்லை என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவுகளை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அரசிடம் முறையிட்டு தீர்வு காண வழி செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.