இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் |
பாடகராக, குழந்தை நட்சத்திரமாக இருந்த பூவையார் ஹீரோவாக நடித்துள்ள படம் ‛ராம் அப்துல்லா ஆண்டனி'. ஜெயவேல் இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து பூவையார் பேசுகையில் '' 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை சொல்லிவிட்டு பூவையார் தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்தார். வேறு யாராவது இருந்தார்கள் என்றால் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறி இருப்பார்கள். ஆனால் அவர் உறுதியாக நின்றார்.
இந்த படத்தில் எல்லாமே லைவ்வாக பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் அடி உதை எல்லாமே லைவ்வாக வாங்கினோம். எனக்கான ஒரு திரை விலகும் என ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். அது இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. பாட்டு தான் எனக்கு எல்லாமே. நான் பாடிக்கொண்டே இருப்பேன். கூடவே நடிப்பையும் தொடர்வேன். இந்த இடத்தில் நான் வந்து நிற்பதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என் அம்மாவை நினைத்து பார்க்கிறேன். அவர் என் குழந்தையாக அடுத்து பிறக்க வேண்டும். நான் அவர் மகனாக எப்போதும் பிறக்க வேண்டும்' என்றார்.