மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதிபாபு, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் ‛அண்ணாத்த'. குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி வருகிறது. கொரோனா, ரஜினியின் உடல்நல பாதிப்பு என தடைப்பட்டு தடைப்பட்டு நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்பட பணிகளை முடித்து கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி. ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவித்தது. தற்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். அதாவது நவ., 4ல் படம் திரைக்கு வருவதாக ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் ரஜினி திரும்பி இருப்பது போன்று உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள் இம்மாதம் மத்தியில் அல்லது அடுத்தமாதம் 50 சதவீதம் இருக்கைகள் உடன் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.