''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள விமான நிலையம் பற்றி 'ஆர்ஆர்ஆர்' இயக்குனர் ஒரு வருத்தமான பதிவை காலையிலேயே பதிவிட்டுள்ளார்.
“லுப்தான்சா விமானம் மூலம் அதிகாலை 1 மணிக்கு வந்திறங்கினோம். ஆர்டிபிசிர் சோதனைக்கான படிவத்தை நிரப்பச் சொன்னார்கள். அனைத்து பயணிகளும் தரையில் உட்கார்ந்தும், சுவற்றில் வைத்தும் அந்தப் படிவங்களை நிரப்பினார்கள். அதைப் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை. மேஜைகளை வைப்பது ஒரு சாதாரண சேவை. வெளியேறும் கேட்டுக்கு வெளியே பல தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா மீதான முதல் பார்வை எப்படி இருக்கும்?. தயவு செய்து இதைக் கவனியுங்கள்,” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவிற்கு தொடர்ந்து பல லைக்குகளும், ரிடிவீட்டுகளும் கிடைத்து வருகின்றன.