என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ரஜினியின் அமெரிக்க பயணம், அவரது உடல்நல பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார் நடிகை கஸ்தூரி. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் ‛‛அலைபேசியில் விவரத்தை சொன்னார்கள். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. நல்ல விஷயம் காத்திருக்கிறது. தலைவரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்'' என கஸ்தூரி டுவீட் செய்தார்.
இந்நிலையில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் டுவிட்டரில், ‛‛தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்'' தெரிவித்துள்ளார்.
இதற்கு, ‛‛என்னை அழைத்து பேசியது கங்கை அமரன். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை'' என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
ரஜினிவை வைத்து கஸ்தூரி ஏற்படுத்திய கலகம் சமூகவலைதளங்களில் மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. இதை வைத்து கஸ்தூரியை மீண்டும் ரசிகர்கள் வசை பாட தொடங்கிவிட்டனர்.