சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தெலுங்கு சினிமாவில் 1980-90களில் சிரஞ்சீவி, மோகன்பாபு இருவரும் பிசியான நடிகர்களாக இருந்தனர். சிரஞ்சீவியின் பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் மோகன்பாபு. அந்தவகையில் அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருந்து வந்துள்ளது. ஆனபோதிலும் 2000க்கு பிறகு அவர்களின் நட்பில் சிலகாலம் கருத்து மோதல் காரணமாக விரிசல் விழுந்திருக்கிறது. என்றாலும் ஒரு கட்டத்தில் மீண்டும் அவர்களுக்கிடையே நட்பு மலரத் தொடங்கியிருக்கிறது.
இந்தநிலையில் மோகன்பாபு நடிப்பில் வெளியாக இருக்கும் சன் ஆப் இந்தியா படத்தின் டிரெய்லரில் வாய்ஸ் கொடுத்திருந்தார் சிரஞ்சீவி. இதனால் விரைவில் நடைபெறவிருக்கும் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவிற்கு தான் சிரஞ்சீவி ஆதரவு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவரோ பிரகாஷ்ராஜ்க்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.