தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இந்தியிலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ராஷ்மிகாவை பொறுத்தவரை, தனது க்யூட்டான முகபாவங்களால் மட்டுமல்ல, க்யூட்டான பதில்களால் கூட ரசிகர்களை மகிழ்வித்து வருபவர். ரசிகர்கள் எடக்கு மடக்கான கேள்வி கேட்டால் கூட, அதற்கு சாதுர்யமாக பதில் சொல்லி அவர்களை காயப்படுத்தாமல் அதை காமெடி ஆக்கிவிடுவார்.
அப்படி சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வந்தபோது, ஒரு ரசிகர், உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. உங்களுக்கு சம்மதமா என ராஷ்மிகாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஷ்மிகா சிறியதாக ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் "அட்லீஸ்ட் எனக்கு பிடித்த மாதிரி மென்மையாக எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணுங்கள் பார்ப்போம்" என்று கூறியுள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதில், கேள்வி கேட்டவருக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தரும் என்பது நிச்சயம்.