மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
நடிகர் கமல்ஹாசன் கைசவம் ‛இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கின்றான்' ஆகிய படங்கள் உள்ளன. இவற்றில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 பஞ்சாயத்தில் உள்ளது. எப்போது இந்த பிரச்னை தீர்ந்து மீண்டும் துவங்கும் என்பது கோர்ட்டின் தீர்ப்பை பொருத்து அமையும். அதேசமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏற்கனவே அறிவித்த தலைவன் இருக்கின்றான் படமும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கமல் - வெற்றிமாறன் பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்க உள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது. தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கும் வெற்றிமாறன், அடுத்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இதை முடித்ததும் கமல் படத்தை இயக்குவார் என தெரிகிறது.