பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
மலையாளத்தில் வெளிவந்த ஜோசப் படம் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. தி கிரேட் இண்டியன் கிச்சன் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் ஆகிறது. இது தவிர த்ரிஷ்யம் 2, டிரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும் படங்களும் ரீமேக் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் அஞ்சாம் பத்திரா என்ற படமும் ரீமேக் ஆக உள்ளது. ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் குஞ்சாகோ போபன், ஷரப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்தனர்.
போலீசை மட்டும் குறிவைத்து தொடர் கொலைகள் செய்யும், சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கிற கதை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்தத் படம் 6 கோடியில் தயாரிக்கப்பட்டு சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இந்த படம் தற்போது தமிழ், இந்தியில் ரீமேக் ஆகிறது. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், ஆஷிக் உஸ்மான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதில் தமிழ் ரீமேக்கில் நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.