பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா ஹெலன், மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம் தான் ஏராளமான ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். 'ஓவியா ஆர்மி' என்ற தனி ரசிகர்கள் கூட்டமே இந்நிகழ்ச்சியின் மூலம் உருவானது.
சமூக ஊடகத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமூகம் சார்ந்த கருத்துக்களையும் முன் வைக்கிறார். பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தபோது தனது கண்டனத்தை பதிவு செய்தார் ஓவியா. இதேபோன்று மாணவர்களும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார் எழுந்து வருகிறது.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், ‛‛உங்கள் மகளுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் மீடூ விஷயங்களை கற்று தருவதை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக உங்கள் மகன்களுக்கு மரியாதை மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.




