சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! | கேங்கர்ஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! |
'அசுரன், கர்ணன்' என்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த தனுஷ் அடுத்து தமிழில் சில படங்களில் நடிக்க உள்ளார். அவற்றோடு தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராக உள்ள ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார். இப்படத்தை தெலுங்குத் தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்க உள்ளார்.
இப்படத்திற்கான பட்ஜெட் 120 கோடி என்றும், படத்தில் தனுஷ் சம்பளமே 50 கோடி என்றும் செய்திகள் பரவின. ஆனால், தனுஷ் சம்பளம் இன்னும் அந்த அளவிற்கெல்லாம் போகவில்லை என்பதுதான் உண்மை என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இப்படத்தின் பட்ஜெட்டும் அவ்வளவு அல்ல, தனுஷ் சம்பளமும அவ்வளவு அல்ல என்கிறது டோலிவுட் வட்டாரம். அவற்றில் பாதி கூட தாண்டவில்லை என்பதே உண்மை என்கிறார்கள்.
கடைசியாக தனுஷ் நடித்து ஓடிடியில் வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தின் பட்ஜெட் 50 கோடி என்றும் தகவலை பரப்பினார்கள். அப்படத்தின் ஓடிடி உரிமை 60 கோடிக்கு விற்கப்பட்டது என்றும் சொன்னார்கள். சமீப காலங்களில் டுவிட்டரில் 'சினிமா டிராக்கர்' என்று அழைக்கப்படும் சிலரிடம் இது போன்ற தகவல்களை சொல்லி பரப்பச் செய்வதாக கோலிவுட்டிலேயே குற்றம் சாட்டுகிறார்கள்.
அவர்கள் சொல்வதை உண்மை என்று நம்பும் ரசிகர்களும், அவர்கள் பதிவிடுவதை வைத்து செய்திகளை வெளியிடும் வட இந்திய ஊடகங்களும் அவற்றை மேலும் பரப்புவதாகச் சொல்கிறார்கள்.
இப்படி பதிவிடுவதால் அந்தப் படங்களுக்கான வேற்று மொழி உரிமைகளுக்கான விலையை உயர்த்திக் கேட்க வசதியாகவே இப்படி செய்கிறார்களாம். சில ஓடிடி நிறுவனங்கள் டுவிட்டரில் வருவதை உண்மை என்று நம்பி மோசமான படங்களையும் அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாந்து போவதாகவும் இங்குள்ளவர்கள் கிண்டலடிக்கிறார்கள்.