வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
நடிகர் சிலம்பரசன் உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாநாடு'. இந்தப் படத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், மாநாடு படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அதில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்டு சிம்பு பேசிய போது தான் மது பழக்கத்தை நிறுத்தி ஒரு வருடம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் பிரேம்ஜி மாதிரியான ஆட்கள் உடன் இருக்கும் போது மது பழக்கத்தை கைவிடுவது எவ்வளவு கடினம் என்றும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
சிம்பு பிரேம்ஜி பற்றி பேசிய தகவல் இணையத்தில் வைரலாகியது. செய்தியாகவும் வெளியாகியது. தற்போது பிரேம்ஜி அதற்கு பதிலளித்துள்ளார். சிம்பு தன்னைப் பற்றியது செய்தியாக வெளியான ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்த பிரேம்ஜி நான் செவனேனு தான் போய்கிட்டிருந்தேன். யார் வம்பு தும்புக்காச்சு போனேனா என்ற வடிவேலு காமெடி டெம்ப்ளேட்டைப் பகிர்ந்து நகைச்சுவையாக ரியாக்ட் செய்துள்ளார். பிரேம்ஜியின் இந்தப் பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.