முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
அஜீத்துடன், "பில்லா படத்தில், நீச்சல் உடையில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் நயன்தாரா. அதைத் தொடர்ந்து, தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள படத்திலும் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளார் அவர். "பொதுவாக, சக கலைஞர்களுடன், எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் பழகக்கூடியவர் அஜீத் என்று சொல்லும் நயன், "பில்லா படத்தில் எப்படி என்னுடன் நட்பாக பழகினாரோ, அதே போன்றே இப்போதும் பழகினார். அதோடு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எப்போதாவது ஸ்பாட்டுக்கு தாமதமாக சென்றாலும் கோபம் காட்ட மாட்டார். புரிந்து கொள்ளக்கூடிய தன்மையான நடிகர் என்று அஜீத் பற்றி சொல்லிக் கொண்டே போகும் நயன்தாரா, "அவர் ஒரு இனிமையான நடிகர். மீண்டும் அவருடன் நடிக்கும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார்.