இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ நாகார்ஜுனா, தமிழிலும் 'ரட்சகன், தோழா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். திரையுலகில் அறிமுகமாகி 35 வருடங்கள் ஆனாலும், இன்னமும் தனக்கென தனி பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியை மூன்று சீசன் தொகுத்து வழங்கியவர், அடுத்து மூன்றாவது முறையாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
சினிமா, டிவியைத் தொடர்ந்து அடுத்து ஓடிடி தளத்திலும் கால் பதிக்க உள்ளாராம். கடந்த வருடத்திலிருந்தே அவரை வெப் தொடர்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ள தொடரில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
முந்தைய பேட்டி ஒன்றில் கூட தன்னிடம் இரண்டு வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார் நாகார்ஜுனா. இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய தொடர் ஒன்றும், டைம் டிராவல் பற்றிய தொடர் ஒன்றும் என இரண்டு கதைகள் அவரிடம் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் அவர் எதில் நடிக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.