Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அறிவுரையை மீறிய ஹீரோவை அன்பாக எச்சரித்த பாலகிருஷ்ணா

17 ஜூன், 2021 - 20:05 IST
எழுத்தின் அளவு:
Balakrishna-advice-to-hero

அறுபது வயதானாலும் கூட, இன்னும் பவர்புல் ஹீரோவாகவே நடித்து இளம் நடிகர்களுக்கு சவால் விட்டு வருபவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. பார்ப்பதற்கு முரட்டு தோற்றத்தில் காணப்பட்டாலும், சக நடிகர்களிடம் எப்போதும் அன்பு கொண்ட பாலகிருஷ்ணா, அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருபவர். அந்த வகையில் தற்போது போயப்பட்டி சீனு இயக்கத்தில் தற்போது அகண்டா என்கிற படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.

ஏற்கனவே ஶ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தவர் தான் ஸ்ரீகாந்த். பெரும்பாலும் கதாநாயகனாக நடித்து வரும் ஸ்ரீகாந்த் தற்போது தனது படத்தில் வில்லனாக நடிப்பதில் பாலகிருஷ்ணாவுக்கு பெரிய அளவில் சந்தோஷம் இல்லை. காரணம் ஸ்ரீகாந்தை கதாநாயகனாகவே தொடர்ந்து நடிக்கும்படியும் நல்ல கதைகளையும் படங்களையும் தேர்வு செய்து நடிக்கும்படியும் வில்லனாக நடிக்க கூடாது என்றும் அறிவுரை கூறியவர் தான் பாலகிருஷ்ணா.

ஆனால் தற்போது அவர் சொன்னதையும் மீறி அவருக்கு வில்லனாக நடிக்கும் சூழல் ஸ்ரீகாந்துக்கு ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் அவரது நடிப்பில் எந்த குறையும் சொல்லாத பாலகிருஷ்ணா, இனி மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டாம் என்றும் கதாநாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் கூறி, சில இயக்குனர்களையும் அவருக்கு சிபாரிசு செய்துள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடும் சாய் பல்லவிகுடும்ப உறவுகளுடன் நேரத்தை ... கேஜிஎப்-2 டப்பிங்கில் மாளவிகா தீவிரம் கேஜிஎப்-2 டப்பிங்கில் மாளவிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
24 ஜூன், 2021 - 14:39 Report Abuse
பிஞ்சதலையன் பால்கி சித்தப்பா சொல் பேச்சு கேளப்பா ஸ்ரீகாந்து அப்பால சித்தப்பு கோவபட்டா என்ன ஆவுமுன்னு தெரியுமுல்ல.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in