Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உதவி கேட்டு சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த சிறுவன்

12 ஜூன், 2021 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Sonu-Sood-fan-walk-700km-from-Hyderabad-to-Mumbai-by-walk

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிஜத்தில் ஹீரோ ஆகியிருக்கும் சினிமா வில்லன் சோனு சூட். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரெயில், விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தல், மகள்களை ஏரில் பூட்ட உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தல், தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி ஆலை தொடங்கல் என பல பணிகளை செய்து வருகிறார்.

மும்பையில் உள்ள அவரது வீட்டு முன் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் உதவி கேட்டு நிற்கிறார்கள். இவற்றை மீடியாக்கள் வெளியிடுவதால் சோனு சூட்டிடம் சென்றால் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தெலுங்கானாவை சேர்ந்த ஒரு சிறுவன் வெறும் காலுடன் 700 கிலோ மீட்டர் பயணித்து நடந்தே சென்று சோனு சூட்டை சந்தித்துள்ளான்.

தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற அந்த சிறுவனின் தந்தை ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். ஊரடங்கு காரணமாக ஆட்டோ ஓடாததால் கடன் தவணை கட்ட முடியவில்லை. கடன் கொடுத்த வங்கி ஆட்டோவை பறிமுதல் செய்து விட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தை காப்பாற்ற சோனு சூட்டை சந்தித்து உதவி கேட்க கிளம்பி விட்டான் வெங்கடேஷ்.

கடந்த 1ம் தேதி சோனு சூட் படத்தை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு நடக்க தொடங்கியவன் இடையில் கோவில்களில் தங்கி, பிச்சை எடுத்து உணவருந்தி 10 நாட்களுக்கு பிறகு மும்பையை அடைந்துள்ளான். மும்பையில் சோனு சூட்டின் வீட்டை கண்டுபிடித்து சென்றவன் அங்குள்ளவர்களிடம் தான் அவர் ரசிகர் என்றும் அவரை பார்க்க தெலுங்கானாவில் நடந்து வந்திருப்பதாகவும் சொன்னான்.

இந்த தகவல் சோனுசூட்டுக்கு தெரிவிக்கப்பட்டதும். அந்த சிறுவனை சந்தித்து அவனுடன் படம் எடுத்துக் கொண்ட சோனுசூட் அவன் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல ஏற்பாடு செய்ததுடன் கணிசமான பணத்தையும் கொடுத்து அனுப்பி உள்ளார்.

என்றாலும் "என்னை காண இவ்வளவு தூரம் வந்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இது போன்ற தவறான வழிமுறைகளை நான் ஊக்குவிப்பதில்லை. மற்றவர்களும் செய்யாதிருக்க வேண்டும்" என்று டுவிட்டரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடிசுஷாந்த் சிங் படத்துக்கு எதிரான ... சிபிஐ அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீசாந்த் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
13 ஜூன், 2021 - 05:21 Report Abuse
N Annamalai வருத்தமாக உள்ளது .ஆனால் நம்பிக்கையை பார்த்தல் மகிழ்ச்சியாக உள்ளது .இந்த மனஉறுதியுடன் மக்கள் வாழ வேண்டும் .நடக்க கூடாது .நீங்கள் ஹீரோ ஆகி விடீர்கள் எல்லோர் மனிதிலும் .
Rate this:
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
12 ஜூன், 2021 - 19:31 Report Abuse
A.SENTHILKUMAR You are the real hero sir. I stand up and salute you sir.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in