மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் எப்படியும் அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பமாகிவிடும் என்ற நம்பிக்கையில் திரையுலகினர் இருக்கிறார்கள். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்புகள் இரவு, பகலாக நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழில் தற்போதுள்ள நிலவரப்படி அதிகப் படங்களில் விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்குமார் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களது சில படங்கள் முடிந்திருந்தாலும் வெளியீடு தாமதமாகி வருகிறது.
நடிகைகளைப் பொறுத்தவரையில் பிரியா பவானி சங்கர் தான் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். “கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, ஹாஸ்டல்” ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், இந்தியன் 2, ருத்ரன், பத்து தல, ஹரி இயக்கும் படம் என கைவசம் 9 படங்களுடன் முன்னணியில் இருக்கிறார். மேலும் சில படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இவருக்கு அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். “பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம்” ஆகிய ஆறு படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் கணக்கில் இருக்கின்றன. இவை தவிர மூன்று தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
தமிழில் தற்போதும் நம்பர் 1 நடிகை என சொல்லப்படும் நயன்தாரா அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நெற்றிக்கண் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஓடிடி வெளியீடு என்று சொல்லப்படுகிறது.
த்ரிஷா நடித்து முடித்துள்ள சதுரங்க வேட்டை 2, கர்ஜனை எப்போது வரும் என்று அவருக்கே தெரியாது. அவர் நடித்து முடித்துள்ள ராங்கி படம் ஓடிடி வெளியீடு என்கிறார்கள். தமிழில் பொன்னியின் செல்வன் படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
![]() |