திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' |
பா.ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த பிராங்களின் ஜேக்கப் இயக்கி உள்ள படம் ரைட்டர். சமுத்திரகனி, இனியா, மகேஸ்வரி, லிசி, சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை பல தயாரிப்பாளர்கள் நிராகரத்திருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் பிராங்களின் ஜேக்கப் கூறியிருப்பதாவது:
அட்டக்கத்தி படத்தில் இருந்து காலா வரையில் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்தேன். அவரிடம் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே ரைட்டர் கதையை எழுதி தனியாக படம் இயக்கலாம் என்று பல தயாரிப்பாளர்களை சந்தித்தேன், அவர்கள் எல்லாம் சிங்கம் மாதிரி சிறுத்தை மாதிரி, சாமி மாதிரி போலீஸ் கதை கொண்டு வாருங்கள் என்றார்கள்.
அடிதடி போலீஸ் பற்றியும், ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் உள்ள போலீஸ் பற்றியும் நிறைய படங்கள் வந்து விட்டதே. இது ஒரு காவல் நிலையத்தின் ரைட்டரின் யதார்த்த வாழ்க்கை என்று சொன்னால், இந்த படத்துக்கு விருது வேண்டுமானால் கிடைக்கும், வசூல் வராது என்று சொன்னார்கள்.
சோர்ந்து இருந்த நேரத்தில் ரஞ்சித் அண்ணா கூப்பிட்டு என்ன கதை வைத்திருக்கிறாய் என்று கேட்டார். அப்போது நான் தயாராக வைத்திருந்த 3 கதைகளை சொன்னேன். அதில் அவர் தேர்வு செய்தது ரைட்டர் கதையை. அதோடு இந்த கதையில் சமுத்திரகனி நடித்தால் நன்றாக இருக்கும் என்ற அவரே அதையும் தேர்வு செய்தார். காலா படத்தில் சமுத்திரகனியோடு பணியாற்றியதால் அவரிடம் கதை சொன்னதுமே ஒப்புக் கொண்டார்.
இப்படித்தான் ரைட்டர் உருவானது. சமுத்திரகனி ஒரு காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிக் கொண்டு அதிகார வர்க்கத்துக்கும், நடுத்தர குடும்ப வாழ்க்கைக்கு இடையிலும் நடத்தும் போராட்டம்தான் கதை. காவல் துறைக்கும், மக்களுக்குமான இடைவெளியை இந்த படம் குறைக்கும். காவல்துறையில் உள்ளவர்களும் நம்மை போன்ற சராசரி மனிதர்கள்தான் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்கும். என்கிறார்.