தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசை. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 18ம் தேதி வெளிவருகிறது.
பொதுவாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் கதையை அந்த நிறுவனமே வெளியிடும். அதன்படி ஜகமே தந்திரம் படத்தின் கதையையும் வெளியிட்டுள்ளது. அது வருமாறு:
மதுரையைச் சேர்ந்த எந்தக் கவலையும் இல்லாத ரவுடி சுருளி. லண்டன் நிழலுலகில் ஆயுதக் கடத்தல், தங்க வியாபாரம் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ் மற்றும் அவனது கூட்டத்தில் ஊடுருவ, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, லண்டனில் அரசியல்வாதிகளோடு வைத்திருக்கும் பெரிய தாதா பீட்டர் என்பவனால் சுருளி வேலைக்கு எடுக்கப்படுகிறான்.
லண்டன் செல்லும் சுருளி மதுரை ஸ்டைலில் லண்டன் அண்டர்கிரவுண்ட் தாதாக்களை எப்படி டீல் செய்கிறான் என்பதை காமெடியும், ஆக்ஷனும் கலந்து தருகிற படம். சுருளிக்கு லண்டனிலேயே இலங்கை தமிழ் பெண்ணான ஐஸ்வர்ய லட்சுமியுடன் ஒரு காதலும் அமைகிறது. இதுதான் படத்தின் கதை.
முதலில் கதை நியூயார்க்கில் நடப்பதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பாளர் சசிகாந்திற்கு லண்டனில் நிறைய நண்பர்கள் இருப்பதால் படப்பிடிப்பு நடத்த எளிதாக இருக்கும் என்று அவர் தான் கதை களத்தை லண்டனாக மாற்றினார் என்பதை அவரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.