ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் |

கொரோனா தொற்று காலத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் ஆக்சிஜன் வங்கியை தொடங்கினார். இப்போது கொரோனா பாதுகாப்பு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி தெலுங்கு சினிமாவில் உள்ள 24 சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளார்.
"திரைப்படத் துறையை காக்கும் அத்தனை தொழிலாளர்களும், திரைப்பட பத்திரிகையாளர்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் வந்து கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லா நாட்களும் 24 மணி நேரமும் இந்த தடுப்பூசி முகாம் இயங்கும்" என்றும் அவர் அறிவித்துள்ளார்.