எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, கலாபகாதலன், ஒரு கல்லூரியின் கதை, வட்டாரம், நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், மதாராசபட்டினம் போன்ற படங்கள் அவரை வேகமாக உயர்த்திச் சென்றன. ஆனால் அதற்கு பிறகு அவருக்கு அமைந்த படங்கள் அந்த பணியை செய்யவில்லை.
ஆனால் சமீபகாலமாக கவனமுடன் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அரண்மணை 3 படத்தில் காமெடி செய்கிறார். சார்பேட்டா பரம்பரையில் கெத்து காட்டுகிறார். எனிமியில் விஷாலுக்கு வில்லத்தனம் காட்டுகிறார். இந்த 3 படங்களுமே ஆர்யாவுக்கு அடுத்த பாதையை திறந்து வைக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் அவர் சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசமாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். நலன் குமாரசாமியும் சூது கவ்வும் படத்திற்கு பிறகு கவனிக்கத்தக்க படம் தரவில்லை. அவர் இயக்கிய காதலும் கடந்து போகும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன்பிறகு படம் இயக்காமல் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.
இப்போது பல ஆண்டு உழைப்பில் ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்திருக்கிறார். அதில் ஆர்யா நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.