ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பொதுவாகவே சர்ச்சைகளுக்கு பேர்போனவர் ராம் கோபால் வர்மா, வில்லங்கமான படங்களை எடுப்பார். வில்லங்கமான கருத்துக்களை வெளியிடுவார். இதனால் எப்போதும் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராகவே அவர் இருப்பார்.
இந்போது அவர் செய்திருக்கும் பரபரப்பு அருவெறுப்பின் உச்சம். ஒரு நடிகையின் தொடையை முத்தமிட்டு, அதனை இன்னொரு நடிகையை கொண்டு படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். படம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் "இந்த போட்டோவில் இருப்பது நான் தான். இது சோனியா நரேசின் தொடை தான். இந்த போட்டோவை எடுத்தது நைனா கங்குலி தான். அவர் திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான போட்டோகிராபரும் கூட" என குறிப்பிட்டுள்ளார்.
"இதுபோன்ற அற்பத்தனமான காரியங்களை விட்டுவிட்டு, நல்ல காரியங்களை செய்யுங்கள். அடல்ட் ஒன்லி படம் எடுத்து பணம் சம்பாதிப்பதை விட்டுவிட்டு சமூகத்துக்கு தேவையான படங்களை எடுங்கள்" என்று சமூக வலைத்தளங்களில் ராம்கோபால் வர்மாவுக்கு எதிரான விமர்சனங்கள் உருவாகி வருகிறது.




