இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக ‛தி பேமிலி மேன்-2 வெப் சீரிஸ்க்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்புக்கு மத்தியில் அமேசான் ப்ரைமில் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த பலரும் இந்த வெப் சீரிஸ்க்கு எதிராக கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டானது.
ராஜ், டிகே இயக்கத்தில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்து, ஹிந்தியில் உருவான, தி பேமிலி மேன் - 2 வெப் சீரிஸ்க்கு டிரைலர் வெளியான நாள் முதல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதில், ராஜி என்ற தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். அவரை பயங்கரவாதி போலவும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது போலவும் காட்டியுள்ளனர். குறிப்பாக, தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சி உட்பட பல தமிழ் அமைப்புகள் இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்துவந்தனர்.
தமிழர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும், தி பேமிலி மேன் - 2 வெப் சீரிஸ் பல எதிர்ப்புகளை மீறி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி., தளத்தில் வெளியானது. இது பலருக்கும் இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இத்தொடரையும், அமேசான் ஓடிடி தளத்தையும் விமர்சித்து பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் அனைத்து அமேசான் சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம், என எச்சரிக்கை விடுத்ததுடன், அமேசான் ப்ரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேமிலி மேன்-2 தொடர் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக FamilyMan2_against_Tamils, BoycottAmazon, Raji, LTTE, போன்ற ஹேஸ்டேக்கில் பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். அமேசானின் சேவைகள் அனைத்தையும் புறக்கணிக்கப்போவதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.