தமிழில் அடுத்த 'உண்மையான பான் இந்தியா' எப்போது? | மாதுரி தீட்சித் உடன் நடனமாடியது பெருமை - வித்யாபாலன் | 'கங்குவா' போல சில கதைகள் உள்ளன: இயக்குனர் சிவா ஆர்வம் | சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார் | ''குற்ற உணர்வால் எடுத்த முடிவு.. 10 ஆண்டுகளே நடிப்பேன்'': அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி | 'புஷ்பா 2' பாடலுக்காக ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | என்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார் : மகன் பற்றி பிரியாராமன் கண்ணீர் பேட்டி | 'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள் | எரிந்து போன முதல் படம், நடன நடிகை, தமிழ் நாட்டின் முதல்வர்: வி.என்.ஜானகி நூற்றாண்டு | பிளாஷ்பேக் : அமிதாப் பச்சனை மிஞ்சிய சிவாஜி |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதும் சினிமா படப்பிடிப்புகள், டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் பின் தற்போது தான் முதல் தளர்வை நாளை முதல் அமல்படுத்த உள்ளார்கள்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பிளம்பிங், எலக்ட்ரிக்கல், மோட்டார் வாகன ரிப்பேர் கடைகள் ஆகியவற்றைத் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி அடைந்தாலும் அத்தொழிலை நேரடியாகவும், மறைமுகவும் நம்பியுள்ள அனைவரின் வாழ்வாதாரமும் மீண்டும் மீட்டெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல தினசரித் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்திற்கான உழைப்பை நாளை முதல் தொடங்க உள்ளனர்.
அது போல சினிமா, டிவி ஆகியவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சினிமாவை நம்பி தான் தியேட்டர்களும் இருக்கின்றன. அவற்றைச் சார்ந்த பல இணை, துணை தொழில்களும் உள்ளன. கடந்த வருட கொரோனா அலையின் போதே தளர்வுகள் அறிவித்தபின் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அடுத்த தளர்வின் போது சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கான அனுமதி கிடைத்தால் அது அத்துறையினருக்கு பேருதவியாக இருக்கும் என எண்ணுகின்றனர். பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அது போலவே தடுப்பூசி உள்ளிட்ட சில வரைமுறை, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினரும், டிவி உலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.