2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா மிகப்பெரிய ஹீரோக்களுடன் நடிப்பார், மிகப்பெரிய படங்களாக தருவார் என எதிர்பார்த்தால் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் நடக்கவில்லை. சொல்லப்போனால் அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்றே சொல்லலாம். இந்த நிலையில் தெலுங்கில் இரண்டாம் நிலை ஹீரோவான நவீன் பாலிஷெட்டியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
ராரா கிருஷ்ணைய்யா படத்தை இயக்கிய மகேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு 'மிஸ் ஷெட்டி -மிஸ்டர் பாலிஷெட்டி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நாயகி - நாயகன் பெயர்களின் பிற்பாதியை எடுத்து ஒன்றிணைத்து படத்திற்கு வித்தியாசமான டைட்டிலாக வைத்துள்ளர்களாம். இந்தமாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கவும் முடிவு செய்துள்ளார்களாம்..