இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ரன், சண்டக்கோழி, பையா என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் அடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி-2 படங்கள் தோல்வியை தழுவின. இந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்திநேனி என்பவரை வைத்து தெலுங்கிலேயே புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் லிங்குசாமி.
ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்திற்காக, வலுவான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள லிங்குசாமி, அதில் நடிகர் மாதவனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மாதவனின் திரையுலக பயணத்தில் கமர்ஷியல் அந்தஸ்து கொடுத்து அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது லிங்குசாமி இயக்கிய ரன் படம் தான். அதை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்திலும் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார் மாதவன்.
லிங்குசாமியின் நட்புக்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.