குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
இயக்குனர் மணிரத்னம் கியூப் சினிமாஸ் உடன் இணைந்து தயாரித்து வரும் ஆந்தாலஜி படம் நவரசா. ஒன்பது குறும்படங்கள் கொண்ட இந்த படத்தின் ஒவ்வொரு குறும் படத்தையும் ஒவ்வொரு டைரக்டர்கள் இயக்கியிருக்கிறார்கள். ரவீந்திரன் ஆர்.பிரசாத், அரவிந்த்சாமி, ஹலிதா சமீம், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், வசந்த் என ஒன்பது இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்களாக பி.சி.ஸ்ரீராம், மனோஜ் பரமஹம்சா, பாலசுப்ரமணியெம்., ராமானுஜம், அபிநந்தன் உள்பட 11 பேர் பணியாற்றியுள்ளனர். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான், ஜிப்ரான்,கார்த்திக், அருள்தேவ் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். இந்த ஒன்பது படங்களில் கெளதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் சூர்யா நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த நவரசா ஆந்தாலஜி படம் ஆகஸ்டு மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் பதிவிட்டு, சூர்யா, கவுதம் மேனன் உடன் இருக்கும் ஒரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.