அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
கொரோனா அலையின் அடுத்தடுத்த தாக்கங்களால் மற்ற தொழில்கள் தட்டுத் தடுமாறி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், சினிமா தியேட்டர்கள் மட்டும் கடந்த ஒன்றரை வருடங்களாக மீளாமல் சிக்கித் தவிக்கிறது. தியேட்டர்களுக்குப் போட்டியாகவும், சவால் விடும் அளவிற்கு பன்னாட்டு ஓடிடி தளங்களில் தமிழ் சினிமா உலகில் பெரும் முதலீட்டைச் செய்து வருகின்றன. கடந்த வருடம் மட்டும் அனைத்து ஓடிடி தளங்களிலும் 20க்கும் கூடுதலான படங்கள் நேரடியாக வெளியாகின.
கொரோனா இரண்டாவது அலையின் கடந்த நான்கு மாத தாக்கத்தில் அதிகப் படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகவில்லை. ஆனால், அடுத்தடுத்து பல புதிய அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, மணிரத்னம் தயாரிப்பில் இன்று 'நவரசா' என்ற ஆந்தாலஜி படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 9 உணர்வுகள், 9 இயக்குனர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த 'நவரசா' ஆந்தாலஜி படத்திற்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் மிகவும் ஓவராக பிரமோஷன்களைச் செய்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக ஒரு குறிப்பிட்ட நாளிதழில் மட்டும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து வந்தது. நேற்று துபாயில் உள்ள பிரபல புர்ஜ் கலிபா கட்டிடத்திலும் பட விளம்பரத்தை லைட்டிங் மூலம் வெளியிட்டுள்ளது.
இந்த 'நவரசா' படத்தின் மூலம் பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த உதவியைத் தொகையை விட பல மடங்கு அதிகமாக விளம்பரங்களுக்கு செலவு செய்கிறார்கள் என திரையுலகத்திலேயே வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். அந்த செலவு தொகையைக் கூட தொழிலளார்களுக்கே அளித்திருக்கலாமே என்கிறார்கள்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலக அளவில் 20 கோடி சந்தாதாரர்களை வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு சராசரியாக 500 ரூபாய் என்றால் கூட 10 ஆயிரம் கோடி வருமானம். நாட்டுக்கு நாடு உள்ள சந்தாதாரர்கள், அந்த நாட்டின் ரூபாய் மதிப்பில் கணக்கில் கொண்டால் 15 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
தமிழ் ஓடிடி உலகில் மற்ற ஓடிடி நிறுவனங்களை விட நெட்பிளிக்ஸ் ஓடிடி பின்தங்கிதான் இருக்கிறது. கடந்த மாதம்தான் 'ஜகமே தந்திரம்' படத்தின் மூலும் நேரடி வெளியீட்டில் அதிரடியாக இறங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் அவர்கள் பல படங்களை வாங்கி வெளியிட உள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால், மொபைல் போனில் பார்ப்பதற்கு குறைந்தபட்ச மாத சந்தா 199 ரூபாய், டிவியில் பார்க்க 499 ரூபாய் என்பதாலும் அவர்களுக்கு இங்கு அதிக சந்தாதாரர்கள் இல்லை.
இந்த மாதிரியான பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் இப்படி காலூன்றினால் தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்கள் கடும் பின்னடைவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது என தியேட்டர்காரர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். விரைவில் தியேட்டர்கள் சங்கத்தினர் ஓடிடி விவகாரம் குறித்து பேச உள்ளதாகத் தெரிகிறது. அதில் சில கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்தவும் உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.