பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? |
நடிகர் விஜய்யின் 65-வது படம் பீஸ்ட். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை விமான நிலைய பகுதிகளில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் விஜய்யுடன் மூன்று வில்லன்கள் மோதவுள்ளனர். அதில் ஒருவராக ஷைன் டாம் சாக்கோ இருப்பார் என்றும் மற்றவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.