சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் தயாரிப்பில், மணிகண்டன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் மற்றும் பலர் நடித்த படமான 'காக்கா முட்டை' படம் வெளிவந்து இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
2015ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் திரைப்படமாகத் தேர்வு, படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகத் தேர்வு என இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற படம். தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட படம்.
இப்படத்தைப் பற்றி நினைவு கூர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், “நாட்கள் எப்படி நகர்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய தினத்தில் வெளிவந்த படம் 'காக்கா முட்டை'. எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமான முக்கியமான படம். பல தடைகளை உடைத்து, எனது வாழ்க்கையில் என்னை உயர்த்திய படம். இயக்குனர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் சார் ஆகியோருக்கு மகத்தான நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




