அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் பிசி ஸ்ரீராமும் ஒருவர். தற்போது செலக்ட்டிவ்வான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்ய போகிறார்.
கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தியின் 27வது படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் செய்கிறார். மற்ற அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பி.சி. ஸ்ரீராம்.