ஆஸ்கருக்கு தேர்வான ‛காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா' | ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி' | மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் | ‛பராசக்தி'க்கு யுஏ சான்று : நாளை படம் ரிலீஸ் | எதையும் யோசிக்காதீங்க, நல்லதே நடக்கும் : திருச்சியில் சிவகார்த்திகேயன் பேச்சு | ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு : மேல்முறையீடு செய்கிறது தணிக்கை வாரியம் | 'பராசக்தி, ஜனநாயகன்' டிரைலர்களை தட்டித் தூக்கிய 'டாக்சிக்' வீடியோ | தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் |

ஐஎம்டிபி நிறுவனம் அவ்வப்போது அந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம், தற்போதைய ஐஎம்டிபி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களை ஒப்பிடும்போது 8.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் முதல்பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதன் இரண்டாம் பாகம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறுமா என்கிற சந்தேகம் பரவலாக இருந்தாலும், ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் ஈடுகட்டி, முதல் பாகத்திற்கு சற்றும் குறையாமல், விறுவிறுப்பாக படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அதனால் இந்தப்படம் மொழிகளை கடந்து, பார்வையாளர்களை வசீகரித்ததால் தான், ஐஎம்டிபி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.