செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு மற்றும் இசையில் உருவான சுயாதீன இசை ஆல்பம் என்ஜாயி என்சாமி. இதனை அறிவு எழுதி பாடினார். அவருடன் சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடினார். அமித் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். தனி இசை ஆல்பத்தில் கோடிக் கணக்கான பார்வையாளர்களை சென்று சேர்ந்து சாதனை படைத்தது.
ஆனால் இதுகுறித்து சந்தோஷ் நாராணயன் பேசியதில்லை. தற்போது அவர் இசை அமைத்துள்ள ஜெகமே தந்திரம் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
நான் என் இசை வாழ்க்கையை ஒரு சுயாதீன இசை அமைப்பாளராகத் தொடங்கினேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பல இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன். இப்போதும் வெளியிட்டு வருகிறேன். அதில் ஒன்று தான் என்ஜாயி என்சாமி. ஒரு இசை ஆல்பம் தாண்டி அதற்கு எனது சினிமா புகழை கொண்டு மேலும் விளம்பரம் தேட விரும்பவில்லை.
அந்த இசை ஆல்பத்தின் தகுதி அதனை உயரத்தில் கொண்டு வைக்கும். எனது சில இசை ஆல்பங்கள் கண்டு கொள்ளப்படாமலேயே கடந்து சென்றிருக்கிறது. அதற்காகவும் நான் கவலைப்படவில்லை. எனது பணி மக்களின் இசையை மக்களுக்கு தருவது. அந்த கடமையை செய்து வருகிறேன்.
நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவார்கள். இல்லாவிட்டால் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். என்னை பொருத்துவரை மக்கள் கொண்டாடினாலும், கடந்து சென்றாலும் எனது இசை இசைதான். என்றார்.