புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு தமிழ் மற்றும் இந்தியில் உருவான படம் இறுதிசுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிசுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை கட்டிவைத்து விட்டு முழு நேர நடிகை ஆனார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிசுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.
இதன்பிறகு எந்த புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால் மீண்டும் குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்விகா சிங் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.
குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள அவர். "ஒரு பயிற்சியாளர் சொல்லித் தருவதை அப்படியே செய்வது கடினம், அடிக்கடி தவறி விழுகிறேன். முச்சு திணறுகிறேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.