ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் மகேஷ்பாபு தனது தந்தையும், முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகருமான கிருஷ்ணாவின் 78ஆவது பிறந்த நாளான நேற்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து தந்தையின் பிறந்த நாளில் ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் என்ற கிராமத்து மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளித்துள்ளார். அந்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்த தகவலையும், போட்டோக்களையும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மகேஷ்பாபு. இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மகேஷ்பாபு இந்த கிராமத்தை ஏற்கனவே தத்தெடுத்து பல திட்டங்களை செயல்படுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.