சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் வில்லன் நடிகரான சோனு சூட், ரியல் ஹீரோவாக மாறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். அந்தவகையில் தற்போது கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு, அவசிய தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார் சோனு சூட். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதற்காகவே கர்னூல் பகுதியில் தனியாக உற்பத்தி கூடமே ஆரம்பித்துள்ளார் சோனு சூட்.
இன்னொரு பக்கம் கொரோனாவால் இறக்கும் மக்களை உடனுக்குடன் தகனம் செய்யவோ அல்லது புதைக்கவோ முடியாமல் கால தாமதம் ஏற்படும் சூழல் பல கிராமங்களில் நிலவுகிறது. இதனை குறிப்பிட்டு சோனு சூட்டிடம் உதவி கேட்டு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்கு இறந்த உடல்களை அவர்களுக்கான இறுதிச்சடங்கு நடக்கும் வரை பத்திரப்படுத்தி வைக்கும் விதமாக ப்ரீசர் பாக்ஸ் எனப்படும் குளிரூட்டும் பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட்.