மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் டிரைலரை இன்று காலை யு டியுபில் வெளியிட்டார்கள்.
லண்டனில் நடக்கும் ஒரு 'தாதா' கதை. தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து லண்டனுக்கு கிளம்பிப் போகும் 'கொக்கி குமார்' போன்ற ஒரு இளைஞன் லண்டன் தாதா சாம்ராஜ்ஜியத்தில் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
கொக்கி குமார், மாரி கலந்த ஒரு கதாபாத்திரமாக இந்த 'சுருளி' கதாபாத்திரம் இருக்குமோ என சந்தேகிக்க வைக்கிறது. எப்படி இருந்தாலும் அதில் ஸ்கோர் செய்து விடுவார் தனுஷ். கதாபாத்திரம் எப்படி இருந்தால் என்ன காட்சிகள் சுவாரசியமாக இருந்தால் சரி.
கதாநாயகி ஐஸ்வர்ய லெட்சுமி இலங்கைத் தமிழ்ப் பெண் என்பது அவர் பேசுவதிலிருந்து தெரிந்துவிடுகிறது. மற்ற கதாபாத்திரங்கள் கலையரசன் மட்டும் தெரிந்த முகமாக இருக்கிறார். லண்டன் தாதாக்களாக ஜேம்ஸ் காஸ்மோ, ஜோசப் ஜோஜு ஜார்ஜ் என டிரைலரின் விளக்க உரையில் 'கதைச் சுருக்கத்தையும்' குறிப்பிட்டுள்ளார்கள்.
கதைச் சுருக்கத்தைப் படித்தால் ஆச்சரியம் ஏற்படுவதைவிட இதை எப்படி நம்பும்படி கார்த்திக் சுப்பராஜ் கொடுத்திருப்பார் என யோசிக்க வைக்கிறது. நம் ஊரைச் சார்ந்த தாதா கதை என்றால் துப்பாக்கி வைத்திருந்தால் கூட அரிவாள் எடுத்தும், கட்டையை எடுத்து மட்டும்தான் சண்டை போடுவார்கள். லண்டன் தாதா கதை என்பதால் தீபாவளி துப்பாக்கி சுடுவதைப் போல சுட்டுக் கொண்டே இருந்தால் காமெடியாகிவிடும்.
படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர்ஹிட் வரிசையில் சேர்ந்தவை. அவற்றை இந்த டிரைலரில் சேர்க்கவேயில்லை. டிரைலரின் முடிவில் 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' என தனுஷின் பன்ச் வசனத்துடன் முடித்திருக்கிறார்கள்.
'சோழர் பரம்பரை' என்பதில் அரசியல் செய்கிறார்களா, 'லண்டன் தாதா'வில் அரசியல் செய்கிறார்களா என்பது படத்தைப் பார்க்கும் போது தெரிந்துவிடும்.