'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் தான், தான் நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்துவிட்டு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். எஜமான், வீரா, முத்து படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இதில் மீனா, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அதிரடியான கேள்வி கேட்டு திகைக்க வைத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மீனா. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென என்னருகில் வந்த ரஜினி சார், மீனா நீ எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டாய் என கூறினார்.. பலரும் அருகில் இருந்த நிலையில் ரஜினி சார் அப்படி கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உடனே அவர் சிரித்துக் கொண்டே, “நாங்கள் எல்லோருமே இத்தனை வருடங்களில் மாறிவிட்டோம்.. ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் நடித்தபோது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாயே” என கூறி கலாட்டா பண்ணி, என்னை மட்டுமல்லாமல், அருகில் இருந்தவர்களையும் சிரிக்க வைத்தார்” என கூறியுள்ளார் மீனா.