விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக ஓடிடி தளங்கள் இந்தியாவிலும் நுழைந்து நன்றாகவே காலூன்றி வருகின்றன. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ 5, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்கள் தமிழில் பழைய மற்றும் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றன.
கடந்த வருடம் கொரானோ முதல் அலை பரவிய போது மக்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக இந்த ஓடிடி தளங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதைப் பயன்படுத்திக் கொண்டு நேரடியாக புதிய படங்களை வெளியிட்டு தங்களை மேலும் வளர்த்துக் கொள்ள அத்தளங்கள் போட்டி போட்டன.
கடந்த வருடத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. இந்த கொரானோ அலை திடீரென உருவான காரணத்தால் புதிய படங்கள் அதிகம் வெளியாகவில்லை. 20க்கும் மேற்பட்ட படங்களை நேரடியாக வெளியிட ஏற்கெனவே உள்ள ஓடிடி தளங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
அவற்றுடன் தற்போது மற்றொருமொரு ஓடிடி தளமான 'சோனி லிவ்' தமிழில் களமிறங்க உள்ளது. அதற்கான தலைமைப் பதவியில் பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் இணைந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அவருக்குள்ள தொடர்பில் பல புதிய படங்களைப் பேசி வருகிறாராம். மேலும், புதிய வெப்சீரிஸ், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் எண்ணமும் உள்ளதாம்.
இந்தத் தளத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். அனேகமாக ஒரு பெரிய படத்துடன் 'சோனி லிவ்' தமிழில் கால் பதிக்கலாம்.