ஜனநாயகன் வழக்கு; சூடுபிடிக்கும் வாதங்கள்; இன்றே தீர்ப்பு? | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை | யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் |

கொரோன 2வது அலை தொற்று காலத்தில் முதல் அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதுதவிர பெப்சி தொழிலாளர்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் நிதி வழங்கினார்.
தற்போது தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் இப்போது கொரோனா 2வது அலையில் இருக்கிறோம். முதல் அலையை விட, இரண்டாவது அலையில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக ஆஸ்துமா, இதயப் பிரச்சினை இருப்பவர்களை ரொம்பவே பாதித்துள்ளது.
தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். முக்கியமான விஷயத்துக்காக வெளியே சென்றால் கூட இரட்டை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
![]() |
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.




