Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பள்ளி விவகாரத்தில் ஜாதி பார்க்காதீர்கள்: குஷ்பு, பேரரசு வேண்டுகோள்

27 மே, 2021 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Kushbhu,-Director-Perarasu-on-PSBB

சென்னையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பானது. அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஒரு ஆசிரியரின் குற்றமாக கருதாமல் ஒட்டுமொத்த பள்ளியை குற்றாவாளியாக்கும் போக்கு சமூக வலைத்தளங்கில் அதிகமாக காணப்படுகிறது. அதோடு ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிரான போக்காகவும் பிரச்சினையை திருப்புகிறார்கள்.

இதுகுறித்து இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது : ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக் கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள்.

சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது. இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர். சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்
இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவு, தாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது தான் பெண்ணின் மானம்.

இவ்வாறு தனது அறிக்கையில் பேரரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த பிரச்சினை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் செய்து இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பயத்தோடு பள்ளிக்கு செல்ல முடியாது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கடுமையான குற்றம். இதில் அரசியலையோ, சாதியையோ கொண்டு வரக்கூடாது. குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். பயந்துள்ள குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
லிங்குசாமி சினிமா பயணத்தில் 20 ஆண்டுகள்லிங்குசாமி சினிமா பயணத்தில் 20 ... கொரோனா பாதிப்பு : மீனவ குடும்பங்களுக்கு உதவும் தர்ஷா குப்தா கொரோனா பாதிப்பு : மீனவ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

INNER VOICE - MUMBAI,இந்தியா
31 மே, 2021 - 13:11 Report Abuse
INNER VOICE இனிமேலாவது ஜாதி அடிப்படையில் பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவற்றில், அட்மிஷன், ஜாதி அடிப்படையில் அரசியல் சலுகைகள், அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்பு, ப்ரோமோஷன் போன்றவற்றை நிறுத்தவும், ஜாதி சொல்லி பிரிக்க கூடாது என்று சொல்லி அரசே ஜாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கினால், சொல்வது ஓன்று செய்வது ஓன்று என்று ஆகிவிடும். Reservation based on religion, es, in school, college admissions, government jobs, promotions etc should be stopped immediately. After 74 years of indepence, still we keep reservations. What a shame. Everything to be made as per MERIT only. We stop staying forward communities, backward communities, scheduled es, scheduled tribes etc etc categories should be taken out from our tem. In the presence of God , all are equal. Dividing people in the name of es (govt is doing) will only help politician for vote banks. e based political parties should be banned.
Rate this:
DMK Venum Poda - Tamil Nadu ,இந்தியா
30 மே, 2021 - 13:17 Report Abuse
DMK Venum Poda அதே சொல்றதுக்கு உங்களுக்கு அருகதை இருக்கா?
Rate this:
bal - chennai,இந்தியா
29 மே, 2021 - 18:52 Report Abuse
bal அந்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே...பெண் போலீஸிடம் வம்பு பண்ணிய ஆள் வெளியில் திரிகிறான்...ஒரு குறிப்பிட்ட சாதியை குறி வைப்பதே திமுகவுக்கு வழக்கம்...ஏன் ஒரு பாதிரியாரையோ மசூதி தலையையோ இது மாதிரி வழக்கில் உள்ளே போடா சொல்லுங்கள் பார்ப்போம்...ராஜகோபாலன் நல்லவர் என்று சொல்ல வரவில்லை...இங்கு மட்டும் வேகம் பிறக்கும்...என்நா இளிச்சவாயர்கள்...
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29 மே, 2021 - 13:17 Report Abuse
Sridhar ராஜகோபாலன் ஒருவர் தவறு செய்ததற்கு, அண்ணாத்துரையிலிருந்து ஆரம்பித்து ஒட்டுமொத்த முதலியார் சமுதாயத்தையே பழிப்பது நியாயமாகாது. தர்மமும் ஆகாது. நிறுத்துங்கள். எல்லாவற்றையும் நிறுத்தி, வைரமுத்துவின் சட்டையை பிடித்து கேளுங்கள், நீ என்ன ஜாதி என்று. அவன் கூட ஜாதிகள் இல்லையடி பாப்பா( இந்த மாதிரி விஷயங்களுக்கு) என்பான்.
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
29 மே, 2021 - 11:26 Report Abuse
தஞ்சை மன்னர் பேரரசு ஒரு வடிகட்டிய மு....ட்டாள் , கேட்டல் 50 வருஷம் முன்பு குடுமத்தில் என்ன நடந்தாலும் அதை மூடி மறைத்து குடும்பத்தை ஒத்து போகவேண்டும் என்று சொல்லும் வடிகட்டிய செண்டி மென்ட் கும்பல் அ..வன்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in