சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா,குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. தற்போது இப்படத்தின் பிரமோசன் தொடங்கியுள்ள நிலையில், அண்ணாத்தயில் நடித்துள்ள சிலர் படம் குறித்த தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில குஷ்பு தான் அளித்த ஒரு பேட்டியில், அண்ணாத்த படத்தில் அருணாச்சலம், அண்ணாமலை, படையப்பா என 90களில் பார்த்த அதே இளமையான ரஜினியை மீண்டும் பார்க்கலாம். அண்ணாத்த படத்தில் தான் நடித்துள்ள கேரக்டர் பற்றி தெரிவிக்காத குஷ்பு, சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை. ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன் படங்களில் நடித்து வந்தபோது ஒருநாள் ஸ்பாட்டிற்கு தாமதமாக வந்தாலும் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்பார். அதேபோல் தான் இப்போது வரை ரஜினி இருக்கிறார். அவரது அந்த மாறாத கேரக்டர் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.