இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2016ல் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தர்மதுரை. இந்த படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். வெற்றிப்படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் பட்டியலில் தற்போது இந்தப்படமும் இடம் பிடித்துள்ளது. ஆம்.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
இதுபற்றி சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்" என்று கூறியுள்ளார்.