மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கீர்த்தி சுரேஷை போலவே, காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் மலையாள திரையுலகில் நடித்து வருகிறார்.. மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர் ஜி.வி.பிரகாஷின் 4ஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழுக்கும் வந்துள்ளார். இந்நிலயில் நடுரோட்டில் மக்கள் சூழ்ந்துள்ள இடத்தில் காயத்ரி சுரேஷ் சிலரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பது குறித்து காயத்ரி சுரேஷ் விளக்கம் கூறியுள்ள இன்னொரு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதன் சாராம்சம் இதுதான்..
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது தோழிகள் வீட்டுக்கு சென்றுள்ள காயத்ரி சுரேஷ், அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். பின்னர் காரில் வேறு ஒரு இடத்துக்கு செல்லும்போது காரை காயத்ரி சுரேஷின் தோழி ஓட்டியுள்ளார். அப்போது ஒரு காரை ஓவர்டேக் செய்தபோது எதிரே வந்த கார்மீது எதிர்பாராத விதமாக இவர்கள் கார் மோதியது. ஆனால் பயத்தில் காரை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
ஆனால் அந்த காரில் வந்தவர்கள் இவர்களை விரட்டி வந்து ஓரிடத்தில் மடக்கி விட்டனர். இவர்களை காரில் இருந்து இறங்க சொல்லி சத்தம் போட, அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட்டது. காரை நிறுத்தாமல் வந்தது தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாக காயத்ரி சுரேஷ் கூறியும் கூட அவர்கள் விடாமல், போலீசை வரவழைத்துள்ளனர்.
நல்லவேளையாக போலீஸார் இவர்களுக்கு ஆறுதலாக பேசியதோடு எதிர் தரப்பையும் சமாதானப்படுத்தி பிரச்சனையை தீர்த்து அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கே கூடியிருந்தவர்கள் இந்த நிகழ்வுகளை படம் பிடித்து சோஷியல் மீடியாவில் வெளியிட, நடிகை காயத்ரி சுரேஷ் குடித்து விட்டு வண்டி ஓட்டினார் என்பது போன்ற மோசமான கமென்ட்டுகள் தான் அதிகம் வந்தனவாம்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடந்தது இதுதான் என கூறி வீடியோ வெளியிட்டுள்ள காயத்ரி சுரேஷ், ஒரு நடிகை என பார்க்க வேண்டாம்.. அட்லீஸ்ட் ஒரு பெண் என நினைத்தாவது உண்மைக்கு மாறாக என்னை பற்றிய செய்திகளை வெளியிடுவதை தவிர்த்திருக்கலாமே என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.